தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நாம் பொறுப்பேற்கமாட்டோம்: புத்தசாசன அமைச்சுவிகாரைகள் தவிர்ந்த பிற இடங்களில் தான்தோன்றித்தனமாக வெசாக் தோரணைகளை அமைப்பதனாலும், தான சாலைகளை நடத்துவதனாலும் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பு கூறப்போவதில்லை என புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. பௌத்த விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர், ”விகாரைகள் தவிர்ந்த பிற இடங்களில் தான்தோன்றித்தனமாக வெசாக் தோரணைகளை அமைப்பதனாலும், தான சாலைகளை நடத்துவதனாலும் ஏற்படும் விளைவுகளுக்கு எமது அமைச்சு பொறுப்பு கூறாது. மகாநாயக்க தேரர்களின் அறிக்கைக்கு அமையவே நாம் செயற்பட்டு வருகிறோம். அதன்படி, விகாரைக்குள் மாத்திரமே தானசாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிற இடங்களில் தானசாலைகளை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கு அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு அங்கீகாரம் இல்லை. வேண்டுமாயின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துடன் கலந்துரையாடி இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, எதிர்வரும் 18, 19 தினங்களில் பௌத்த மக்கள் அனைவரது இல்லங்களிலும் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வீதிகளிலும் பௌத்த கொடிகள் சோடனைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் நாம் பயங்கரவாதத்திற்கு அஞ்சாதவர்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம். ஆனால், மக்களை ஒன்றிணைக்கும் வகையிலான வெசாக் தோரணைகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

விகாரைகள் தவிர்ந்த பிற இடங்களில் தான்தோன்றித்தனமாக வெசாக் தோரணைகளை அமைப்பதனாலும், தான சாலைகளை நடத்துவதனாலும் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பு கூறப்போவதில்லை என புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

பௌத்த விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர், ”விகாரைகள் தவிர்ந்த பிற இடங்களில் தான்தோன்றித்தனமாக வெசாக் தோரணைகளை அமைப்பதனாலும், தான சாலைகளை நடத்துவதனாலும் ஏற்படும் விளைவுகளுக்கு எமது அமைச்சு பொறுப்பு கூறாது.

மகாநாயக்க தேரர்களின் அறிக்கைக்கு அமையவே நாம் செயற்பட்டு வருகிறோம். அதன்படி, விகாரைக்குள் மாத்திரமே தானசாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பிற இடங்களில் தானசாலைகளை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கு அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு அங்கீகாரம் இல்லை. வேண்டுமாயின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துடன் கலந்துரையாடி இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, எதிர்வரும் 18, 19 தினங்களில் பௌத்த மக்கள் அனைவரது இல்லங்களிலும் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வீதிகளிலும் பௌத்த கொடிகள் சோடனைகள் முன்னெடுக்கப்படும்.

இதன்மூலம் நாம் பயங்கரவாதத்திற்கு அஞ்சாதவர்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம். ஆனால், மக்களை ஒன்றிணைக்கும் வகையிலான வெசாக் தோரணைகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.