தாங்க முடியாத பிச்சைக்காரன் தத்துவம்

1452055445-1449பிச்சைக்காரன் படத்தில் நடித்து வரும் விஜய் ஆன்ட்டனியை நிஜமான பிச்சைக்காரர்கள் மத்தியில் பிச்சை எடுக்க விட்டார்களாம். அப்போது அவர் ஒவ்வொரு பிச்சைக்காரர்களிடமும் தனித்தனியாக அவர்களின் சொந்தக்கதையை சோகக் கதையை கேட்க, விதவிதமான ஸ்டோரிகள் கிடைத்ததாம். “

நாம நினைக்கிறோம், அவங்க உழைக்க சோம்பல் பட்டுட்டுதான் இந்த தொழிலுக்கு வர்றாங்கன்னு. ஆனால், மருமகளால் துரத்திவிடப் பட்டவர்கள். மகன்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள்னு எத்தனையெத்தனை ரணங்கள் தெரியுமா அவங்களோட மனசுக்குள்ளே?” என்கிறார் விஜய் ஆன்ட்டனி. நாம எல்லாருமே ஒரு வகையில் பிச்சைக்காரங்கதான். நான் வாய்ப்புக்காக டைரக்டர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் பிச்சை எடுக்கிறேன். ஒவ்வொருவரும் அவரவர் தொழிலுக்காக தேவைக்காக ஏதோ ஒரு விதத்தில் பிச்சைக்காரர்களாதான் நடமாடுறோம் என்று அவர் சொல்லும் தத்துவத்தை கேட்டால், தாங்க முடியலைடா சாமீய்! (விட்ருங்க… படம் பார்க்கணும். அவ்ளோதானே? பார்த்துர்றோம்….! )

LEAVE A REPLY