தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட சகல துறைகளுக்கும் நிவாரணம் – நிதி அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட சகல துறைகளுக்கு நிவாரணம் எதிர்காலத்தில் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரபல இசை குழுக்களின் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சருக்கு இடையிலான விசேட சந்திப்பின்போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை காரணமாக இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.