தாக்குதலுடன் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயற்சி – சம்பிக்க

கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில காலங்களாக அரசாங்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கு இடையிலான பிளவுகள் ஆரம்பித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி, கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் எனும் குற்றச்சாட்டின் மூலம் மீண்டும் சிலர் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படுவதை மையமாக வைத்து, சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் சில மாதங்களின் பின்னரே குறித்த தாக்குதல் சஹரான் ஹாசிம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.