தலைவர் பிரபாகரனுடன் ராஜபக்ஷாக்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு ஒரே சாட்சி நானே! அம்பலப்படுத்திய பொன்சேகா

பசில் ராஜபக்ச மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு நானே சாட்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பசில் ராஜபக்ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நானும் அவரும் பல விடயங்களை பேசுவோம். நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக்ஷவுடன் பேசுவதுண்டு.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார் எனத் தெரிவித்துள்ளார்.