தலிபான் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளிகள் மூடல்

fd9d79ae-62e0-4852-96b6-94a6581e1942_S_secvpf.gifபாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியிடப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் இருந்து 13 தலிபான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் உளவுத்துறை கூறியதையடுத்து பள்ளிகளை மூடும்படி அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி மந்திரி ராணா மசூத் அகமது அறிவித்தார். அவர் அரசாங்க எச்சரிக்கையை மேற்கோள் காட்டவில்லை. ஆனால், கடுமையான குளிர்காலம் மற்றும் கடும் மூடுபனி காரணமாகவே பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

வடமேற்கு பல்கலைக்கழகத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி மாணவர்கள் உள்ளிட்ட 21 பேரை பலிவாங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பல்கலைக்கழகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்காக காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY