தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை! முக்கிய நா.ம உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை-ரணில்!

ஸ்ரீலங்காவில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினமான 21ஆம் திகதி நடைபெற்ற கொடூர தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு அறித்துள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.