தற்கொலைப்படை மூலம் மோடியை கொல்ல சதி : டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

Daily_News_5720287561417குடியரசு தின விழாவின் போது, சிறுவர் தற்கொலை படையினர் மூலம் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது.

தலைநகர் முழுவதும் ேபாலீசார் துருவித்துருவி சோதனை நடத்தி வருகின்றனர். குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை ெகாண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை, குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே கலந்து ெகாள்ள உள்ளார்.

இதற்காக அவர் நேற்று சண்டிகர் வந்தடைந்தார். இந்நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது, சிறுவர் தற்கொலை படை மூலம் பிரதமர் மோடியை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கனவே, குடியரசு தின விழாவை சீர்குலைக்க ஐஎஸ் தீவிரவாதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு படையும், தீவிரவாதிகள் தடுப்பு படையினரும் இணைந்து பெங்களூர், லக்னோ, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினமும் பெங்களூருவில் ஒருவனும், உத்தரபிரதேசத்தில் ஒருவனும் பிடிபட்டனர்.

இப்படிப்பட்ட நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தற்ெகாலை படையாக அனுப்பி பிரதமர் மோடியை தீவிரவாதிகள் குறிவைக்கலாம், இதற்காக தற்கொலை படையினர் எல்லை வழியாக ஊடுவலாம் எனவும் கூறியுள்ளது.

கடந்த சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு திரும்பிய மோடி, திடீரென தனது பாதுகாப்பு வளையத்தை மீறி, கூட்டத்தில் இருந்த சிறுவர்களை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார். இம்முறையும் அவர் அவ்வாறு செயல்படலாம் என்பதை கணித்து ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு வளையத்தை மீறி எதுவும் செய்ய வேண்டாம் எனவும் பிரதமர் மோடியை உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில், சிறுவர்கள் ஏகே 47 துப்பாக்கிகளை பயன்படுத்துவதையும், ராக்கெட் லாஞ்சர்களை இயக்குவதையும் படம் பிடித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இம்முறை குடியரசு தின விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், காஷ்மீர் எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பல்வேறு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் துருவித்துருவி சோதனை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது கார் திடீர் மாயம்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அப்போது, டாக்சி டிரைவர் ஒருவரை கொன்று அவரின் காரை கடத்தினர். பின்னர், சைரன் பொருத்திய போலீஸ் எஸ்பி காரை கடத்தி விமானப்படை தளத்தில் நுைழந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நொய்டாவில் சைரன் பொருத்திய இந்தோ-திபெத் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஒருவரின் கார் மாயமானது. அதைத்தொடர்ந்து பதன்கோட்டில் ஒரு டிரைவரை கொன்று அவரின் டாக்சியை 3 நபர்கள் கடத்தினர்.

இந்த கார்கள் என்ன ஆனது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று டெல்லியின் லோதி கார்டன் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் கார் திருடு போயுள்ளது. அந்த காரில் ஆர்மி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இவற்றை, நாசவேலைக்காக தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாமோ என்ற பீதியும் நிலவி வருகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY