தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்!

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

நேற்றைய கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர், அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக சாதகமான பதிலை அரசாங்கம் வழங்கத் தவறினால், அரசாங்கத்தில் வெளியேறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.