தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்தியக் குழுக்கூட்டம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் யாழில் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோயில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும், கட்சியின் கொள்கை மற்றும் யாப்பு என்பனவும் வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.