தமிழ் மக்களை ரணில் அரசாங்கமே அதகளவு ஏமாற்றியது! கொந்தளிக்கும் சரவணபவன்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே எங்கள் தேசத்தின் வளங்களை அழித்தது. அவற்றை புனர்நிர்மாணம் செய்து கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடமே உள்ளது. ஏனைய மாகாணங்களுக்கு நிகராக எங்களுடைய மாகாணத்தையும் கொண்டு செல்ல அதற்கான அபிவிருத்திப் பணிகளை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

நீர்வேலியில் இடம்பெற்ற கோப்பாய் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான பொதுமக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அதன் பின்னர் உங்களைப் பற்றி சிந்திப்போம் என்று சொல்ல வேண்டிய காலம் தற்போது எழுந்துள்ளது. சொல்ல வேண்டும். இது மக்களிடத்தே செல்லவேண்டும். அவர்கள் செய்வதை வைத்துக்கொண்டு அவருடைய கட்சி செய்வதாக கூறி சில இளைஞர்கள் அவர்களுக்குப் பின்னால் திரிகின்றார்கள். அங்கஜன் ராமநாதனுக்கு பின்னாலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பின்னாலும் சில இளைஞர்கள் திரிகின்றார்கள்.

அவர்கள் விசுவாசமாக மனமுவந்து போனதாக இல்லை. அவர்கள் தற்போது தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக திரிகின்றார்கள். தற்போதுள்ள அரசாங்கத்தை நாங்கள் பார்ப்பதற்கு முன்னால் ஆரம்ப காலத்தை நோக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்கா, ரணில் விக்ரமசிங்க, இவர்களில் நாங்கள் பார்ப்போமானால் தமிழ் மக்களை அதிகளவாக ஏமாற்றியது இந்த ரணில் விக்கிரமசிங்க.

அவர்கள் நல்லாட்சி என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் அவர்களிடம் போனோம், ஒன்றாக சேர்ந்து வேலை செய்தோம், அவர்கள் எங்களுக்கு எதையும் செய்யவில்லை. ஒட்டு மொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தமிழ் மக்களை அதிக அளவு ஏமாற்றி விட்டது.

தேர்தல் வரப்போகிறது, ஐக்கிய தேசியக் கட்சியினர் வீடு வீடாக வருவார்கள், நாங்கள் அதைச் செய்தோம் இதனை செய்தோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள். நாங்கள் மறக்கக் கூடாது. எங்களுக்கு உண்மையில் தெரியும் இவர்களுடைய நிலைப்பாடு இவ்வாறாகத் தான் இருக்குமென்று. கடந்த அரசாங்கத்தின் போது வடமராட்சி கப்பூது வெளியில், அதிக அளவில் நன்னீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்து சொல்லிவிட்டு எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால் அந்த பகுதியில் வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. யார் செய்தது? ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தான் கொண்டு வந்தது. ஆனால் பணம் ஒதுக்கப்படவில்லை. அந்த விஸ்வரூபம் தற்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மை இனமான இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடந்த காலத்தில் வடமாகாணத்திற்கு எதையும் செய்யவில்லை.

மருத்துவம் கல்வி சுகாதாரம் போன்ற விடயங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் எங்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள் என்பதை நாங்கள் மனதில் பதிந்து வைத்திருக்க வேண்டும். கம்பரெலிய திட்டம் இலங்கை பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர் அது வட மாகாணத்திற்கு வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் தான் அது எங்கள் மூலம் வந்தது. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருக்கின்றோம் என்பதற்காக அவர்கள் அதை எங்களுக்கு தரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்