தமிழ் மக்களை தலை நிமிர்ந்து வாழ வைப்போம்! யாழ்ப்பாணத்தில் தேரர் சபதம்

யாழ்பாணத்தில் இந்து பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இருந்து பௌத்த துறவிகள், இந்து குருமார்கள் மேளதாள நாதஸ்வர வாத்தியம் மற்றும் கண்டிய நடனத்துடன் நல்லூர் கந்த சுவாமி ஆலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை ஆலய முன்றலில் ஊடகவியலாளர்களுக்கு பௌத்த துறவி சோபித தேரர் கருத்துத் தெரிவித்திருந்தார் .

அவர் அங்கு தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.