தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

கிளிநொச்சி – பூநகரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயகாந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான சிவஞானம் சிறீதரன், சுமந்திரன், சசிகலா ரவிராஜ், ஆர்னோல்ட், வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், தமிழரசுக் கட்சி பூநகரி பிரதேச கிளையின் தலைவர் குபேந்திரன், முன்னாள் பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி தில்லை நாதன், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் பலவற்றில் தலைவராக இருந்த இரத்தினமணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.