தமிழ் துணை இராணுவக் குழுக்களால் – நாட்டில் இனக்குரோதங்கள் ஏற்படும்- சி.வி.கே.சிவஞானம்

நாட்டில் தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது இனக்குரோதங்களையும் பிளவுகளையுமே ஏற்படுத்தும். இத்தகைய செயற்பாடுகள் தேசிய நலனுக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரானது என்பதால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்று சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டு தீவிரவாத கட்டமைப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையின் போது முஸ்லிம் உளவாளிகள் தமக்கு பெரிதும் உதவியதாக பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

அவ்வாறான உளவாளிகளே ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாதத்தை உருவாக்கி இன்று தீவிரவாதத்தை உருவாக்கியுள்ளனர்.

எனவே பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு வேண்டிய தகவல்களை அல்லது உளவுத் தகவல்களை தமது கட்டமைப்பு மூலமே பெற்றுக் கொள்வது தான் சரியான அணுகுமுறையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.