தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு இளம் பாடலாசிரியர் மரணம்

தமிழ் திரையுலகிற்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே பல முக்கிய நபர்களை இழந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் உயிரிழந்த கவிஞர் நா. முத்துக்குமார் மரணமடைந்து துக்கம் கூட இன்னும் விளகாத நிலையில் மற்றொரு இளம் பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 49) மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய அவர் பின்பு பாடலாசிரியராக திரையுலகில் அடியெடுத்துவைத்தார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடல் மூலம் பிரபலாமானார். சுமார் 100 பாடல்கள வரை எழுதியுள்ள அவர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் அதிக பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்களால் கவரபட்ட விஜய் தனது படங்களில் அவரது பங்களிப்பு நிச்சயம் வேண்டும் என்று கூறியது அவரது உழைப்புக்கு கிடைத்த மரியாதைக்கு உதாரணம்.

LEAVE A REPLY