தமிழ் சமூகத்தின் விரோதியே ரஜினி: சீமான்

போராட்டம் நடத்துபவர்களை சமூக விரோதி என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் தமிழர்களுக்கான நடிகர் ரஜினிகாந்த எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வால் தற்கொலைச் செய்துக்கொண்ட மாணவி பிரதீபா தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர்,

“நீட் தேர்வில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் என்பது தெரிந்​த ஒன்று. நீட் தேர்வு மருத்துவர்களை ஒருபோதும் உருவாக்காது மாறாக மனநோயளிகளையே உருவாக்கும்” என்றார்.

LEAVE A REPLY