தமிழ் அதிகாரிகள் உளவு பார்க்கின்றனராம்!

தூதரகங்களை விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் பொறுப்பு தமிழ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் கொழும்பில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து உளவு பார்க்கும் பொறுப்பு அந்தந்த தூதரகங்களில் கடமையாற்றி வரும் இலங்கை அரசியல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் வடக்கிற்கு சென்று இலங்கை அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதனால் அதனை அரசியல்வாதிகள் எதிர்த்து விமர்சனம் செய்கின்றனர்.அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடியாக தலையீடு செய்து வருவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்களில் பெருமளவில் தமிழர்களே அரசியல் அதிகாரிகளாக கடமையாற்றி வருகின்றனர் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் செயற்பாடுகளை விமர்சனம் செய்யும் தெற்கின் அரசியல்வாதிகள் குறித்து கண்காணிக்கும் பொறுப்பு , தூதரகங்களில் பணியாற்றி வரும் தமிழ் அதிகாரிகளிடம் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஒப்படைத்துள்ளன என மறைமுகமாக இந்த செய்தியில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY