தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலுடன் வெளியிடப்பட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் ‘நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேற்று காலை யாழ் நகரிலுள்ள பிள்ளாயார் இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா! என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும் வரிகள் அடங்கியிருந்தன.

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா

அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா

இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா!

போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் ஜனாதிபதியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் இவ்வாறு பல உத்திகளை கையாள்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,

தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.<யாழில்.நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் புலிகள் அமைப்பின் பாடல் ஒலிபரப்பியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள் சின்னங்கள் போன்றவற்றை உபயோக படுத்துவது சட்டவிரோதமானதே அது தேர்தல் விதிமுறை மீறல் என்பவற்றுக்கு அப்பால் அது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY