தமிழில் ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்தவர் ஷாலினி பாண்டே. அந்த படம் ஹிட்டடித்த நிலையில், தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக 100% காதல் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

தெலுங்கில் இருந்து சில படங்கள் கிடைத்தும், கதை தனக்கு திருப்தி கொடுக்காததால் அந்த படங்களை தவிர்த்து விட்டு, ஜீவா நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். 100% காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் ஷாலினி பாண்டே, தன்னை இம்ப்ரஸ் பண்ணக்கூடிய கதைகளாக கேட்டு வருகிறார்.

LEAVE A REPLY