தமிழர் விவகாரம் தொடர்பில் பேசாமல் நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவே இந்தியத்தலைவர்களுடனான சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தேசியப்பிரச்சினக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் இதன்போது பேசப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்ற வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பிய நிலையில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்திய விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன உட்பட பல தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.இந்த சந்திப்புக்கள் ஆக்கபூர்மானதாக அமைந்தன.

எனினும் இந்த விஜயத்தின்போது, அதி­காரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்­ப­ட­வில்லை என்றும் தனது சந்­திப்­புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களாகவே காணப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.