தமிழர்களை இராணுவம் கொடுமைப் படுத்தியது-சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் தமிழர்கள் சிலர் மீது இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சரவதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தாம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், துரதிஷ்டவசமாக, அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர கூறியுள்ளார்.
சர்வதேசப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், இத்தகைய இராணுவ கொடுஞ்செயல்கள் இடம்பெறுவதற்கு தடையாக இருந்திருக்கும்” என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக, கடந்த புதன்கிழமை அசோசியஸ் பிரஸ் செய்தி நிறுவனம் ஒரு ஆய்வை வெளியிட்டிருந்தது.
அது தொடர்பாகவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY