தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்ட நல்லாட்சி தயாரில்லை: சுரேஷ்

நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ட நீதியேனும் நிலைநாட்டப்படாது என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் இராணுவத்தை காப்பாற்றும் செயற்பாட்டிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே, எந்தவொரு காலக்கட்டத்திலும் விசாரணைகள் என்பது நடத்தப்படவும் மாட்டாது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியும் கிடைக்காது” எனத் தெரிவித்தார்.