தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுப்போம் – கூட்டமைப்பு

தமிழர்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சாந்தி சிறிஸ்கந்தராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பதவியில் நீடிப்பதற்காக சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை விலை பேசுகின்றனர். அதற்கு கூட்டமைப்பிலுள்ள சிலரும் விலை போயுள்ளனர்.

ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எம்மக்களின் விடிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கும்.

மேலும் சில அரசியல்வாதிகளும் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.