தமிழரசின் கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று (23) கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.