தமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.6-நாட்களாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். மு.க ஸ்டாலினுடன் தோழமை கட்சித்தலைவர்களும் ஆளுநரை சந்தித்து பேசினர்.

LEAVE A REPLY