தமிழக ஆட்சியாளர்கள் ஆலயங்களை பாதுகாப்பதில்லை: தமிழிசை

தமிழகத்தின் ஆட்சியாளர்கள் ஆலயங்களை பாதுகாக்க தவறுவதாக, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

தற்போதைய தமிழக அரசும் சரி, இதற்கு முன்னர் ஆட்சி செய்த கட்சிகளும் சரி, ஆலயங்களின் சிலைகள், தூண்கள் உள்ளிட்ட எந்த கலைப் பொருட்களையும் பாதுகாக்கவில்லை.

அத்தோடு டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் சந்திப்பானது தர்ம சங்கடமான சந்திப்பா அல்லது தர்ம யுத்தமா என்பது தெரியவில்லை என்றார்.

மேலும், இருவருடைய சந்திப்பிற்கும் தான் கருத்து கூற முடியாதென்றும், அது அவர்களுக்கு இடையிலான யுத்தம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.