தமிழக அரசுமீது மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! மு.க.ஸ்டாலின் தகவல்

அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தேவைப்பட்டால் தமிழக அரசுமீது சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தபோதே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவத்தொடங்கிவிட்டது. தற்போது, அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தேவைப்பட்டால் தமிழக அரசுமீது சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும். மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் தீர்க்க வேண்டிய நிலை தி.மு.க-வுக்கு உள்ளது. தமிழக மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு வரும்” என்று கூறினார்.

LEAVE A REPLY