தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் -டிடிவி.தினகரன்

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டியும், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டியும் மன்னார்குடி அருகே உள்ள தனது குல தெய்வ கோவிலில் தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரினி இன்று சாமி தரிசனம் செய்தார்.

மன்னார்குடி-கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள வீரமணவாளன் கோவிலில் தினகரன் இன்று காலை 11-45 மணிக்கு வந்தார். பின்னர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் மக்களை வரும் 3ம் தேதி சந்திக்க உள்ளேன். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது என கூறினார்.

LEAVE A REPLY