தமிழகத்தில் எப்போது தேர்தல் ? தேர்தல் ஆணையம் விளக்கம்

i3.phpதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதிகளை இறுதி செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனக் கூறினார். வெள்ள பாதிப்புகளால் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழகத்திடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY