தமன்னா மீது புகார் கொடுத்த தயாரிப்பாளர்

i3-php‘தர்மதுரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தமன்னாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் தேவி படத்தில் தமன்னாதான் கதாநாயகி. இவர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது. பிரபுதேவாவின் உத்தரவுப்படி இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் தமன்னா. தேவி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தேவி படத்தின் புரமோஷனுக்காக தமன்னா சென்னை வந்ததை அறிந்ததும் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் செம டென்ஷனாகிவிட்டார். தர்மதுரை படத்தின் புரமோஷனுக்கு அழைத்தபோது வர மறுத்தவர், இப்போது தேவி புரமோஷனுக்கு மட்டும் எப்படி வந்தார் என்று கடுப்பானதோடு, இது குறித்து நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷாலிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY