தனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருடைய ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடி ரகுல் பிரீத்திசிங். இதைதொடர்ந்து, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

சாய்பல்லவி தற்போது சூர்யாவின் ‘என்ஜிகே’, தனுஷ் நடிக்கும் ‘மாரி-2’ படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடி ஆகிறார்

LEAVE A REPLY