தனுஷ் – ஜோதிகா மோதல்?

தனுஷ் நடித்துள்ள விஐபி2 படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தனுஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார். விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பதிலாக 24ம் தேதிக்கு தள்ளிப்போனதால், அந்த தேதியை விஐபி2 கைப்பற்றும் என சினிமா வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படமும் இதே தேதியில் வெளிவரவுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. முற்றிலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மா இயக்க நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

விஐபி2 மற்றும் மகளிர் மட்டும் படங்கள் மோதுவது உறுதியா என்பது நாளை தான் தெரியவரும்.

LEAVE A REPLY