தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனை தனுஷ் பிறந்தநாளான ஜீலையில் 28இல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புரொமோசன் பாடல் ஒன்றை மும்பையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

அதில் தனுஷ் மற்றும் கஜோல் ஆட, டியோ பாஸ்கோ நடன அமைக்கிறார்.

LEAVE A REPLY