தனுஷின் அப்பா ஆகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்!

dhanush_s a chandrasekarதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு அப்பாவாக, நடிக்கப் போவது விஜயின் அப்பா. ஆமாம்…. சாட்சாத் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரே தான்.

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து துரை.செந்தில்குமாரின் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

பெயரிடப்படாத அப்படத்தில் தனுஷின் அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் அப்பாவாக நடிக்கக் கேட்டபோது எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தோஷமாக ஒப்புக் கொண்டதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

நவம்பர் , டிசம்பர் என 2 மாதங்களிலேயே படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

LEAVE A REPLY