தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க அரசை அந்த நிறுவனம் கோரியுள்ளது.

ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதிக்கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது.
எங்கள் தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானோருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை.
இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கோரியுள்ளது.
மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அதை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி பெற முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.