ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கான ஆதரவு தொடர்ந்து சரிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசியலில் ரஷ்யாவின் தலையீடு, தேக்கமடைந்துள்ள சுகாதாரப் பராமரிப்புச் சட்டம் குறித்த அதிருப்தி உள்ளிட்ட விவகாரங்கள் அதற்குக் காரணம்.

திரு. டிரம்ப்பின் தலைமையிலான முதல் 6 மாதங்கள் குறித்த கருத்துக் கணிப்பில் குறைவான ஆதரவே அவருக்குக் கிட்டியுள்ளது.

70 ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒருவருக்குக் கிடைத்த ஆகக் குறைவான ஆதரவு அது என்று கூறப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் நாளேடும், ABC News செய்தி நிறுவனமும் இணைந்து அந்தக் கருத்துக் கணிப்பை நடத்தின.

அதன் முடிவில், அதிபர் ட்ரம்ப்பின் ஆட்சி குறித்த ஒப்புதல் விகிதம் 36 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், அவருக்கான எதிர்ப்பு விகிதம் 58 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவித்தன.

LEAVE A REPLY