டோக்லாம் தங்களுக்கு சொந்தமானது என்ற சீனாவின் கருத்தை நிராகரித்தது பூடான்

இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது. அத்துடன், அத்துமீறி சாலை அமைத்து வருகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. இதனால், 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. படைகளை வாபஸ் பெறுமாறு சீனா விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. இந்த நிலையில், டோக்லாம் தங்களுக்கே என்று கூறி வரும் சீனாவிற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பூடான் அரசு வட்டாரங்கள் கூறியதாவது:- “ டோக்லாமில் உள்ள எல்லை விவகாரத்தை பொறுத்தவரை எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பூடான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் கடந்த ஜூன் 29,2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்லாம் பகுதியில் மட்டுமே மோதல் உள்ளது. அந்த பிராந்தியத்திற்காக மோதல் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY