டொனால்டு டிரம்புடன் இருந்த ஆபாச நடிகைக்கு எனது சொந்த பணத்தை கொடுத்தேன் வக்கீல் சொல்கிறார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-ஆம் ஆண்டு என் சொந்த பணத்திலிருந்து $130,000-ஐ கிளிபோர்டுக்கு கொடுத்தேன். இதை டிரம்பின் நிறுவனம் மூலமாகவோ அல்லது அவர் தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு தொடர்பாகவோ கொடுக்கவில்லை. அந்த பணத்தை டிரம்ப்போ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ திரும்ப தருவதாக கூறவில்லை என கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சம்மந்தமாக தான் இந்த பணம் கொடுக்கப்பட்டது என தேர்தல் கமிஷனிடம் புகார் கூறப்பட்ட நிலையில் அதை மைக்கேல் மறுத்துள்ளார். இது சட்டபடி தரப்பட்ட பணம் தான் எனவும் இதற்கும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கும் சம்மந்தமில்லை எனவும் மைக்கேல் கூறியுள்ளார்.

எதற்காக அவ்வளவு பணம் கிளிபோர்டுக்கு கொடுத்தீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, ஒரு விஷயம் உண்மையில்லாமல் இருந்தால் அது உங்களை பாதிக்காது என அர்த்தமில்லை, நான் எப்போதும் டிரம்பை பாதுகாப்பேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY