டெல்லி செல்கிறார் பன்னீர்செல்வம்.. நாளை மோடியுடன் சந்திப்பு..!

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் தமிழக அரசியலிலும், அ.தி.மு.கவிலும் பல அதிரடி மாற்றங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா, சசிகலா பொதுச் செயலாளர், ஜெ., சமாதியில் தியானம், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு, சசிகலா சிறை, டி..டி.வி. தினகரன் சிறை என காட்சி மாற்றத்திற்கு பின்னர் இரு அணியாக பிளவு பட்டு நிற்கிறது. அ.தி.மு.க.

இந்நிலையில், பன்னீர்செல்வம் தரப்பினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நீதி விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஓரம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்றது ஓ.பி.எஸ் அணி. ஆனால், அதுவும் தற்போது இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி பயணம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை காலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும், நாளை மாலை 5 மணி அளவில், பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அனில் மாதவ் தவேவின் இறுதி சடங்கில் அவர் கலந்து கொள்கிறார்.

தற்போதை அரசியல் சூழலில், பன்னீர்செல்வத்தின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,

LEAVE A REPLY