டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன்,தமிழக விவசாய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் அளித்தனர். மேலும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை இன்று காலையில் விவசாயிகள் சந்தித்தனர்.

LEAVE A REPLY