டீசலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியை நூற்றுக்கு 5 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்!

டீசலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியை நூற்றுக்கு 5 சதவீதத்தால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னாரில் நிர்மானிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது, நாட்டின் மின்சார உற்பத்தியில் 30 சதவீதமானவை டீசலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.