ஜேர்மனியில் தொடரும் பாலியல் இம்சைகள்! பொலிஸார் அதிரடி கைது

i3.phpஜேர்மனியில் உள்ள பொது நீச்சல் குளத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் வன்முறை தாக்குதலை நடத்திய புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தில் பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் பாலியல் தாக்குதல் நடத்தியதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் புலம்பெயர்ந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண் புலம்பெயர்ந்தவர்கள் குளிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

எனினும், சில இடங்களில் பெண்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்தவாறு உள்ளது.

குறிப்பாக சாக்ஸோனி நகரில் உள்ள Zwickau என்ற பகுதியில் பொது நீச்சல் குளம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த நீச்சல் குளத்தில் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் குளித்துக்கொண்டு இருந்தபோது புலம்பெயர்ந்தவர்கள் அடங்கிய ஒரு கும்பல் அவர்களிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிலர் பெண்கள் உடுப்பு மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.

மேலும், நீச்சல் உடுப்பில் இருந்த பெண்கள் முன்னிலையில் புலம்பெயர்ந்தவர்கள் சிலர் சுயஇன்பம் அனுபவித்தது பூதாகரமான பிரச்சனையாக கிளம்ப பொலிசார் அங்கு வந்து அத்துமீறலில் ஈடுப்பட்ட பல புலம்பெயர்ந்தவர்களை கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் பல கட்ட விசாரணையை நடத்திவிட்டு நிபந்தனையின் பேரில் விடுதலை செய்துள்ளனர்.

நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களில் வடக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY