ஜேக்கப் ஷூமா மறுப்பு

தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக ஜேக்கப்ஷூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை இருவரும் மறுத்துள்ளனர்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அவருக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக உள்ளனர். எனவே அவர் ஓட்டெடுப்பில் தோல்வி அடையும் நிலை உள்ளது.

ஆகவே அவர் ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது. ஆனால் பதவி விலக அவர் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அவரை சமாதானம் செய்து பதவி விலக செய்ய கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மூத்த நிர்வாகிகளை ‘ஷூமா’ வீட்டுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகி என்பவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவர் பதவி விலகியதும் ஷூமா புதிய அதிபரானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY