ஜெர்மனியில் மேயராக முதல் இந்தியர் அசோக் ஸ்ரீதரன் பதவியேற்பு!

Sridharan-1kleinஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் சிறீதரன் (49) ஜெர்மனியின் Bonn நகர மேயராக வியாழக் கிழமை பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 13-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, Bonn நகர மேயர் பதவிக்கான போட்டியில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் அவர் போட்டி யிட்டார். அதில் 50.6 சத வீத வாக்குகளைப் பெற்று அசோக் சிறீதரன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 21 ஆண்டுகளாக சோஷல் ஜனநாயக கட்சியின் கட் டுப்பாட்டில் இருந்த அந்த நகர நிர்வாகம் முடிவுக்கு வந்தது. ஜெர்மனியின் முக் கியத்துவம் வாய்ந்த ஒரு நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகம் இந்திய வம் சாவளியைச் சேர்ந்தவரின் கீழ் வருவது இதுவே முதல் முறையாகும். ஜெர்மனியில் குடியேறிய இந்தியத் தந் தைக்கும் ஜெர்மன் தாய்க் கும் பிறந்தவர் அசோக் சிறீதரன். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர் மனி இரண்டாகப் பிரிந்த போது, பான் நகரம்தான் மேற்கு ஜெர்மனியின் தலைநகராக இருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றிணைந் ததும், பெர்லின் அந் நாட்டின் தலைநகரானது.

பெர்லினுக்கு அடுத்தபடி யாக அந்த நாட்டில் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக பான் இருந்து வரு கிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலை மையிடங்கள், பத்துக்கும் மேற்பட்ட அய்.நா. அமைப் புகளின் தலைமையிடங் கள் பான் நகரில் உள்ளன.

LEAVE A REPLY