ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து ஷாக் ஆன தணிக்கை குழு

சாம்ராட், என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், காதல் கிருக்கன், மகா நடிகன், இங்கிலீஸ்காரன், வியாபாரி, குரு சிஷ்யன், ராஜாதிராஜா உள்பட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் 7 வருடங்களுக்கு பிறகு இயக்கி உள்ள படம் ஜெயிக்கிற குதிர. இதில் ஜீவனுடன் டிம்பிள் கோபர்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர யோகி பாபு, ரோபோ சங்கர், ரவி மரியா, சிங்கம்புலி, என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் மிரட்டு போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு ஏராள தாராள கவர்ச்சி காட்சிகளாம். நாயகன் ஜீவனும், நாயகி டிம்பிளும் நீச்சல் குளத்தில் போடும் ஆட்டம், இருவரும் சேர்ந்து ஒரே டவலை உடுத்திக் கொண்டு அடிக்கிற லூட்டி, படம் முழுக்க நிறைந்திருந்த டபுள் மீனிங் டயலாக் பார்த்து மிரண்டிருக்கிறார்கள் தணிக்கை குழுவினர்.

“நியாயப்படி படத்துக்கு டபுள் ஏ கொடுக்க வேண்டும் ஆனால் அதற்கு விதிமுறைகளில் இடம் இல்லை. அதனால் படு கவர்ச்சி காட்சிகளின் நீளத்தை குறைத்து, பல காட்சிகளை நீக்கி, டபுள் மீனிங்க வசனங்களை மவுனித்து ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறோம்” என்கிறார் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர்.

LEAVE A REPLY