ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்-அமைச்சராக மக்கள் வாக்களிக்கவில்லை மு.க.ஸ்டாலின் பேட்டி

201702051228561948_People-did-not-vote-for-anyone-from-Jaya-s-household-to-be_SECVPF.gifபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், புதிய முதல்–அமைச்சராக சசிகலா தேர்வாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல்கள் மறுக்கப்பட்டும் வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் சூழலில் பிடிஐக்கு பேட்டியளித்து உள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்-அமைச்சராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறிஉள்ளார்.

“2016-ம் ஆண்டு மே மாதம் தமிழக மக்கள் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமையவே வாக்களித்தார்கள் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அல்லது ஜெயலலிதா வீட்டில் உள்ள மற்றவர்கள் ஆட்சிநடத்த வாக்களிக்கவில்லை,” என்று கூறிஉள்ளார்.

மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் எந்த முடிவையும் தி.மு.க. ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டே எடுக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். ஆளும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்து உள்ளது.
இப்போது உள்ள அரசு, தெளிவாக பெரும்பான்மை மக்களின் ஆதரவை கொண்டிருக்கவில்லை, இப்போது உள்ள அரசில் அமைச்சரவை பிளவு உள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் பல்விதமாக பேசுகிறார்கள், இது தோல்விக்கானது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY