ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

முன்னாள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஜெயலலிதா உருவப்படம் சட்டசபை அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சட்டசபை அரங்கில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசரமாக பேரவையில் படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டசபை மரபை காக்க வேண்டிய சபாநாயகர், அதனை மீறி இருக்கிறார். ஜெயலலிதா படத்திறப்பு விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை.

ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர கதியில் ஜெயலலிதாவின் படம் பேரவையில் திறக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வராதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY