ஜெயலலிதா அரசு மீது சேற்றை வாரி வீசியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கிறோம்

தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் தியாகிகளை நினைவு கூறும் வகையில் சென்னை காந்தி மண்டபம் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகியோர் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோர் நேற்று மலர் தூவி மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாயை பொத்திக்கொண்டிருந்த கமல் இன்றைக்கு வாய் திறப்பது வேடிக்கையாக இருக்கிறது. அன்றைக்கே வாய் திறந்திருக்கலாம்.

ஆனால், இன்றைக்கு வாய் திறந்தாலும்அதில் உண்மை இருக்க வேண்டும். சிறிதளவும் உண்மை இல்லாமல், ஜெயலலிதா அரசு மீது சேற்றை வாரி வீசினால் யார் தான் சும்மா இருப்பார்கள். எனவே தான் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து இந்த கருத்தை சொல்லட்டும். அரசியலுக்கு வருவதில் தைரியம் இல்லை. ஆனால், போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக சேற்றை வாரி வீசினால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.

LEAVE A REPLY