ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு 12 ந்தேதி வரை கால அவகாசம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பல்லோ நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரியிருந்தது.

இதனை ஏற்ற விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பலோ நிர்வாகத்துக்கு ஜன. 12 வரை அவகாசம் – விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், குடும்ப மருத்துவர் சிவக்குமார் இருவரும், அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிடபட்டு உள்ளது.

முன்னதாக இன்று விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் பேட்டி அளிக்கும் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்பால்மிங் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தேன்.என கூறினார்.

LEAVE A REPLY