ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற புதுச்சேரி எம்எல்ஏக்கள்

7அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில், 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஏ.அன்பழகன் (உப்பளம்), ஏ.பாஸ்கர் (முதலியார்பேட்டை), கே.ஏ.யு.அசனா (காரைக்கால்), வையாபுரி
மணிகண்டன் (முத்தியால்பேட்டை) ஆகியோர் வெற்றி பெற்றவர்கள்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவை 4 பேரும் சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சந்திப்பின்போது, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், புதுச்சேரி மாநிலச் செயலர் வெ.புருஷோத்தமன், விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலரும், ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, கர்நாடக மாநிலச் செயலர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY